கல்கிசை நீதிமன்றத்திற்குள் பாதாள உலகக் குழுக்கள் இடையே மோதல்
பிரபல போதைப்பொருள் வர்த்தகர்களான படோவிட்ட அசங்க மற்றும் கொஸ்மல்லி தரப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் கல்கிசை நீதிமன்றத்திற்குள் வைத்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
படோவிட்ட அசங்க தரப்பைச் சேர்ந்த சந்தேக நபரான கருணாலுகே ஸ்ரீநாத் பிரியசாந்த பெர்னாண்டோ மற்றும் கொஸ்மல்லி தரப்பைச் சேர்ந்த சந்தேக நபரான மதுஷ்க ரேணுக பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு நேற்று (24.09.2026) கல்கிசை நீதிமன்றத்திற்குள் வைத்து மோதிக் கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள்
படோவிட்ட அசங்க தரப்பைச்பிரிவைச் சேர்ந்த ஸ்ரீநாத், நவம்பர் 2025இல் கல்கிசை சிறிபால வீதியில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் ஆவார்.

கொஸ்மல்லி தரப்பைச் சேர்ந்த மதுஷ்க, சமீபத்தில் தெஹிவளையின் சிறிசங்கபோ வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டை வீசி இரண்டு கொலைகளைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார்.
சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக இருவரும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணை
படோவிட்ட அசங்கவின் கூட்டாளியான ஸ்ரீநாத் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது, கொஸ்மல்லி தரப்பைச் சேர்ந்த மதுஷ்கா, அடுத்த வழக்கிற்காக கைதிகள் அமர்ந்திருந்த குற்றவாளிக் கூண்டிற்கு அருகிலுள்ள இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அதன்போது குற்றவாளிக் கூண்டிலிருந்து வெளியே வந்த ஸ்ரீநாத் திடீரென மதுஷ்கவை கடுமையாக தாக்கியுள்ளார்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களும், பொலிஸாரும் இணைந்து இருவரையும் விலக்கியுள்ளனர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்கிசை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அதேநேரம் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களைத் தனித்தனியாக சிறையில் வைக்குமாறு கல்கிசை மேலதிக நீதவான் ஹேமாலி ஹல்பந்தெனிய சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |