அம்பலப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் அடையாளங்கள்: எச்சரிக்கும் மொட்டுக் கட்சி!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர்கள் குறித்து விசாரணைகளை நடத்திய காவல்துறை அதிகாரிகளின் அடையாளங்களை வெளிப்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
குறித்த விடயம் அவர்களின் குடும்பங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.டொலவத்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளை நடத்திய காவல்துறை அதிகாரிகளின் முகங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பங்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகியுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அனுபவமின்மை
இந்த நிலையில், அரசாங்கம் தனது அனுபவமின்மை காரணமாக இவ்வாறு நடந்து கொள்வதாக டொலவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, பாதாள உலகக் கும்பல்களின் கைது குறித்து அரசாங்கம் கொண்டாடுவது அபத்தமானது என்றும், மாகந்துரே மதுஷ் முந்தைய அரசாங்கத்தின் போது நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட போது இத்தகைய கொண்டாட்டங்கள் எதுவும் இருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
