என்னை அடித்தால் நான் திருப்பியடிப்பேன் - பாதாள உலகக் குழு சூத்திரதாரி எச்சரிக்கை
பல பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டு, நீண்டகாலமாக கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வந்த பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மே (Kehelbaddara Padme) என்பவர் இலங்கையின் உள்ளூர் தொலைக்காட்சிக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.
அண்மையில் அவர் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் இந்த நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, தாம் எந்தவொரு காவல்துறை அதிகாரியையும் அச்சுறுத்தவில்லை என்று பத்மே குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலக உறுப்பினர் என்ற முத்திரை
தாம், நீதியினால் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே, இன்று வெளிநாடு ஒன்றில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம், ஏற்கனவே பாதாள உலக உறுப்பினர் என்ற முத்திரைக்கு உள்ளான நிலையில் அதில் இருந்து நீங்க முடியாது. எனினும் தாம் இதேபோன்று எதிர்காலத்திலும் செயற்பட எண்ணம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம், யாருடனும் மோதலுக்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், மோதலுக்கு வந்தால் தாமும் திருப்பியடிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
முன்னதாக ஹெகல்பத்ரே பத்மேவின் வழிகாட்டலிலேயே கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கனேமுல்ல சஞ்சீவ என்ற பாதாள உலக தலைவர் கொல்லப்பட்டார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்;பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
