சுற்றுலாப்பயணிகளை அச்சப்பட வைக்கும் பாதாள உலக கும்பல்!
நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி பாதிப்படையுமென காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தென் மாகாணத்தில் இடம்பெறும் பாதாள உலக செயற்பாடுகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தேஷ்பந்து மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ''பாதாள உலக செயற்பாடுகள் போன்ற பயங்கரமான சம்பவங்களால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
பெந்தர, அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் அமைதியான சூழலில் வாழ விரும்புகின்றனர். இங்கு துப்பாக்கிச் சூடு சத்தத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த மக்கள் இனி இங்கு வரமாட்டார்கள்.
எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கவும் மிகவும் அவசியம்." என தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேஷ்பந்து தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |