இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்த வளி மாசு!
Srilanka
Colombo
Jaffna
Kandy
Puttalam
Major cities
air pollution
Sarath Premasiri
By MKkamshan
இலங்கையில் பலத்த காற்று வீசுவதால் எதிர்பாராத அளவுக்கு வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய யாழ்ப்பாணம், கொழும்பு,புத்தளம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி (Sarath Premasiri) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மின்னுற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்பிறப்பாக்கிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாலும் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் முகமூடிகள் அணிந்து செல்வது பாதுகாப்பானது என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அதேவேளை சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகளும், பிள்ளைகளும் இதுதொடர்பில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
