காசாவில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் 420 குழந்தைகள்
காசா பகுதியில் 'ஒவ்வொரு நாளும் 420 குழந்தைகள் கொல்லப்படுகின்றனர் அல்லது காயமடைகின்றனர்' என யுனிசெப் தெரிவித்துள்ளது.
காஸா மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்ட குழந்தைகள் அவர்களின் தந்தைகளால் சுமக்கப்படுகின்றன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதல்களால் காஸாவில் 8,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது.
3400ற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
இறந்தவர்களில் ஏறக்குறைய 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்றும் நிறுவனம் கூறியது.
கடந்த மூன்று வாரங்களில், மோதலில் 3,400க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர் மற்றும் 6,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று UNICEF நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் தெரிவித்தார்.
இந்து, முஸ்லிம் வணக்கஸ்த்தலங்களை அபகரிப்பதற்கு உதவும் தொல்பொருள் திணைக்களம்: சுட்டிக்காட்டும் அமெரிக்க ஆணைக்குழு
ஒவ்வொரு நாளும் 420 க்கும் மேற்பட்ட குழந்தைகள்
"இதன் பொருள் காசா பகுதியில் ஒவ்வொரு நாளும் 420 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்கின்றனர் அல்லது காயமடைகின்றனர்," என்று அவர் கூறினார்.
"இது 2019 ஆம் ஆண்டு முதல் உலகின் மோதல் பகுதிகளில் ஆண்டுதோறும் கொல்லப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகும்" என்று UNHCR தலைவர் பிலிப் லாஸரினி திங்கள்கிழமை (ஒக். 30) ஐ.நா பாதுகாப்பு சபையின் அவசர கூட்டத்தில் தெரிவித்தார்.
மேலும், இலட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
காசா பகுதியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்தது "அறியாமையின் செயலாக" இருக்க முடியாது என்று லஸ்ஸரினி கூறினார்.
"காசா பகுதியில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் மனிதர்களாகக் கருதப்படாத ஒரு மாநிலமாக மாற்றப்படுகிறார்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
குழந்தைகள் உயிர்வாழ உப்பு நீர்
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் காஸாவுக்கான உதவிகள் கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இப்போது பல குழந்தைகள் உயிர்வாழ உப்பு நீர் மட்டுமே உள்ளது என்று ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.