எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
விடுமுறை நாட்களில் தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.
அடுத்த 12 மாதங்களுக்கு போதுமான எரிபொருள் சரக்குகளை கொண்டு வர அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தகவலை அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விளம்பரங்கள்
புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுவதற்கு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக ஷெல்டன் பெர்னாண்டோ (Sheldon Fernando) தெரிவித்திருந்தார்.
எரிபொருள்
மேலும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் மூன்று வீத கொமிஷனில் 18 வீத வற் (VAT) வரியை நிறுத்துமாறு அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த கோரிக்கைக்கு உடன்பாடு ஏற்படாவிட்டால் நாளை(09) எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் ஒன்றிணைந்து முக்கிய தீர்மானமொன்றினை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Fuel cargo plan for the next 12 months, uninterrupted supply of fuel during the holidays, advertisement published to establish new fuel stations, financial balance sheets of CPC, cargo payment plans, Iranian credit line payments, storage capacity additions, jet fuel supply, fuel… pic.twitter.com/xvC6D9m59O
— Kanchana Wijesekera (@kanchana_wij) April 5, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |