அரசின் வரிக்கு எதிராக போராட்டத்தில் குதித்த தொழிற்சங்கங்கள்
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன.
மருத்துவம், பொறியியல், வங்கி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று (05) ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அரசை எச்சரித்துள்ளனர்.
வரியை நடைமுறைப்படுத்தினால் தொழில் சங்க நடவடிக்கை
வருமானம் ஈட்டும் போது விதிக்கப்படும் வரியை நடைமுறைப்படுத்தினால், நாளை மறுதினம் தொழில் சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரச ஊழியர்களின் கடன் வட்டி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக எதிர்வரும் 9ஆம் திகதி சுகயீன விடுப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்
இதேவேளை, குருசெத கடன் திட்டம் மற்றும் ஏனைய கடன்களுக்கான வட்டி வீத அதிகரிப்பினால் தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் நேற்று (04) பிற்பகல் பொரலந்த நகரில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
