திசை மாறும் பிரித்தானியா - பிரதமர் எச்சரிக்கை
ஐரோப்பாவில் கொரோனாத் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், பிரித்தானியா வேறு திசையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் பொறிஸ் ஜோன்ஸ்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலத்தில் பிரித்தானியாவில் அதிகளவு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியிருந்ததுடன்,மரணங்களும் அதிகரித்திருந்தன. இருந்த போதிலும் தற்போது அதன் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் மக்கள் அலட்சியமாக நடந்து கொள்ளக்கூடாது என பிரதமர் போறிஸ் ஜோன்ஸ்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாத் தொற்று ஐரோப்பா முழுவதும் பரவிவருவதை நினைவுபடுத்திய பிரதமர், கொரோனா முற்றாக அழியவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐரோப்பாவின் சில இடங்களின் கொரோனாத் தொற்று மிக வேகமாகப் பரவிவருவதாகவும், மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் பொறிஸ் ஜோன்ஸசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் இதனை மிக வேகமாகச் செய்யவில்லை என்றால் நாமும் பாரிய பாதிப்புக்களைச் சந்திக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.