ஜிஎஸ்பியில் இருந்து டிசிரிஎஸ் - பிரித்தானியாவின் புதிய திட்டம்!
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் நிலையான வளர்ச்சியை நோக்காகக் கொண்டு பிரித்தானியா புதிய மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய Developing Countries Trading Scheme (DCTS) என்ற திட்டத்தையே பிரித்தானியா அறிமுகப்படுத்த உள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இந்த திட்டம் தற்போது பிரித்தானியாவின் ஜிஎஸ்பி (GSP) சலுகைப் பயன்பெறும் நாடுகளுக்குப் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியால் வகைப்படுத்தப்படும் நாடுகளுக்கு பொருந்தாது
அதனடிப்படையில், பிரித்தானியா, ஜிஎஸ்பி திட்டத்துக்கு பதிலாக, 2023ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்காக இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
எனினும் இந்த திட்டம் உலக வங்கியால் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் நடுத்தர வருமானம் என்று வகைப்படுத்தப்பட்ட நாடுகளுக்கு அல்லது குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பிரித்தானியாவுடன் சுதந்திர வர்த்தகம் கொண்ட நாடுகளுக்கு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.