பிரித்தானியா உள்ளுராட்சி தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக்கிற்கு பாரிய பின்னடைவு
பிரித்தானியா உள்ளுராட்சித் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகள் அடிப்படையில் பிரதமர் ரிஷி சுனக்கின்(Rishi Sunak) கன்சர்வேட்டிவ் கட்சியை லிபரல் டெமாக்ரட் கட்சி முந்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் பல கட்டமாக வெளியாகி வருகிறது.இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் 50 கவுன்சில்களை கைப்பற்றி லேபர் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மொத்தமுள்ள 107 கவுன்சில்களில் இதுவரை 106 கவுன்சில்களின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இதில் கடந்த முறையைவிட எட்டு கவுன்சில்கள் அதிகமாக பெற்று 50 எண்ணிக்கையுடன் லேபர் கட்சி முன்னிலையில் உள்ளது.
வெளியான முடிவு
ஆறு கவுன்சில்களை கன்சர்வேடிவ் கட்சியும், லிபரல் டெமாக்ரட் கட்சி 12 கவுன்சில்களையும் கைப்பற்றியுள்ளதுடன் இதுவரை வெளியான முடிவுகளில் லேபர் கட்சி 1140 ஆசனங்களையும், லிபரல் டெமாக்ரட் கட்சி 521 ஆசனங்களையும் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி 513 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதில் ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியை தடாலடியாக முந்தியுள்ளது லிபரல் டெமாக்ரட் கட்சி அத்தோடு கடந்த முறையைவிடவும் 97 ஆசனங்கள் அதிகமாகப் பெற்று தற்போது 521 ஆசனங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆனால் கன்சர்வேட்டிவ் கட்சி கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 396 ஆசனங்களை இழந்தது மட்டுமின்றி 10 கவுன்சில்களையும் பறிகொடுத்துள்ளதுடன் கிரீன் கட்சி கவுன்சில் எதையும் கைப்பற்றாத நிலையில் கடந்த தேர்தலைவிடவும் 64 ஆசனங்கள் அதிகமாகப் பெற்று தற்போது 181 ஆசனங்களை வென்றுள்ளது.
உள்ளுராட்சித் தேர்தல்
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் சுமார் 400 ஆசனங்களை இழந்து கன்சர்வேட்டிவ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது ஆனால் தொழிற்கட்சி கடந்த உள்ளுராட்சித் தேர்தலை விடவும் இதுவரை 231 ஆசனங்கள் அதிகமாக கைப்பற்றியுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட ஏனைய கட்சியினர் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 22 ஆசனங்கள் குறைவாகப் பெற்று இதுவரை 285 ஆசனங்களுடன் நான்காவது இடத்திலுள்ளனர்.
இதனிடையே லண்டன் மேயர் தேர்தலில் மூன்றாவது முறையாக சாதிக் கான் வென்றுள்ள நிலையில் லண்டனில் உள்ள 14 தொகுதிகளில் பெரும்பாலானவை லேபர் கட்சியினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |