ஐ.நாவிற்கு சிறிலங்கா நெற்றியடி..! நீதி அமைச்சர் வழங்கிய பதில்
ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை மீதான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது அரசுக்குச் சவாலாக அமையாது என்று நீதி, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
“இலங்கை அரசின் பிரநிதிகள் என்ற ரீதியில் ஜெனிவா சென்றிருந்த நாம், நாட்டில் மீண்டுமொரு இருண்ட யுகம் ஏற்பட இடமளிக்கமாட்டோம் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளோம்.
எமது நிலைப்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்” என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த பிரேரணை நாளை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வாக்களிக்கத் தகுதியுள்ள 47 நாடுகளில் ஆக ஆறு நாடுகள் மாத்திரமே தமக்கு ஆதரவாக பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்று இலங்கை அரசு அச்சம் கொண்டுள்ளது’ எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

