அமெரிக்காவினுள் நுழைந்தது புதிய வகை வைரஸ்
coronavirus
united states
omicron
By Vanan
அமெரிக்காவில் முதல் தடவையாக கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்திலேயே ஒமிக்ரோன் தொற்றுடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22ஆம் திகதி அமெரிக்கா நோக்கி பயணித்த ஒருவருக்கே இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு கொவிட் தொற்றுள்ளமை கடந்த 29ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான நபர், அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்தியவர் என தெரிய வருகின்றது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்