பயங்கர போதைப்பொருளுடன் சிக்கிய பல்கலை மாணவன்
ஐஸ் போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூதூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து செவ்வாய்கிழமை (25) மாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி புத்தகமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
மாவட்ட காவல்துறை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் காவல்துறையினர் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |