மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பல்கலை மாணவன் - தீவிர விசாரனையில் காவல்துறை
By pavan
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் விடுதி கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த நிலையில் அவரை ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை

மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஹோமாகம, தியகமவில் உள்ள தொழில்நுட்ப பீடத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த மாணவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற சந்தேகம் நிலவுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கஹதுடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி