இம்மாதம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா !
Astrology
By Shalini Balachandran
மீன ராசியில் புதன் வக்ரமாவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலையில், பொதுவாக புதன் வக்ர பெயர்ச்சி அடைவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
மீன ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி அடைவது சவால்கள் மற்றும் சுயபரிசோதனைகளின் தனித்துவமான கலவையைக் கொண்டுவரும்.
இந்த காலகட்டம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டமான சம்பவங்களை ஏற்படுத்தப்போகின்ற நிலையில் அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. மேஷம்
- உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையற்ற பல பயணங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.
- இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
- வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சரியான திட்டமிடாமல் இருப்பதால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.
- மீன ராசியில் புதன் வக்ரமாக இருக்கும் போது நீங்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
- இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம் ஏனெனில் அது உங்களுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
- நீங்கள் சமீபத்தில் பதவி உயர்வுக்காக காத்திருந்தால் அது கைநழுவி போகலாம்.
2. விருச்சிகம்
- விருச்சிக ராசிக்காரர்கள் 2025 ஆம் ஆண்டில் சற்று சோம்பேறித்தனத்தை அதிகமாக உணரலாம்.
- எப்போதும் எதையாவது யோசித்தவாறு இருப்பீர்கள்.
- உங்கள் வேலை குறித்த கவலை அதிகமாக இருக்கும்.
- பணியிடத்தில் செய்யும் வேலைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வருத்தப்பட நேரிடும்.
- வியாபாரிகளுக்கு 2025 ஆம் ஆண்டு சுமாராக இருக்கும்.
- நிறைய இலாபத்தை பெற விரும்பினால், உங்களின் திட்டங்களை மாற்றி முயற்சிக்க வேண்டும்.
3. கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு, புதன் மூன்றாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் அதிபதியாக இருக்கிறார்.
- இந்த நிலையில் ஒன்பதாவது வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார்.
- மீன ராசியில் புதன் வக்ரநிலையில் இருப்பதால் சமூகத்தில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படலாம்.
- சில துரதிர்ஷ்டமான சம்பவங்களை நீங்கள் அனுபவிக்கலாம்.
- அலுவலகத்தில் சூழல் உங்களுக்கு எதிரானதாக மாறலாம்.
- வணிகத்தைப் பொறுத்தவரை, உங்களின் உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்காது.
- இது வருமானப் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும்.
- இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை இழக்க நேரிட்டாலும், மாத இறுதியில் நீங்கள் சகஜ நிலைக்குத் திரும்பலாம்.
4. கன்னி
- கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் உறவு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
- வேலை செய்யும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உங்கள் வேலை குறித்து, மேற்பார்வையாளர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
- உங்கள் வேலையால் மேலதிகாரிகள் அதிருப்தி அடையலாம்.
- வணிகர்கள், இந்த காலகட்டத்தில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- நிதிநிலையைப் பொறுத்தவரை, நீங்கள் எதிர்பாராத பெரிய செலவுகளை சந்திக்க நேரிடும்.
5. துலாம்
- உங்களின் அனைத்து முயற்சிகளும் தடைபடலாம்.
- இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நீங்கள் வேறு வேலைத் தேட முயற்சிக்கலாம்.
- உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டி வர வாய்ப்புள்ளதால், வணிகத்தில் நீங்கள் பின்னடைவுகளை சந்திக்கலாம்.
- நிதிரீதியாகப் நீங்கள் பெரிய அளவிலான செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
- எனவே அனைத்தையும் சமாளிக்க தயாராக இருங்கள்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்