பொட்டம்மான் காண்பித்த இரண்டு கடிதங்கள் : இறுதி யுத்தத்தின் அகோரத்தை விபரிக்கும் சிறப்புத் தளபதி
ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியானது மற்றொரு முக்கியமான தளபதியின் களமுனை அனுபவங்களையும், தலைவர் பிரபாகரன் அவர்களது குடும்பத்தின் பேரில் வெளியாகி வருகின்ற செய்திகள் பற்றிய அவரது பார்வையையும் வெளிக்கொண்டுவரவுள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் அவர்கள் மரணமடைந்த பின்னர் அவர் நினைவாக உருவாக்கப்பட்ட பூநகரி சிறப்பு படையணியின் தாக்குதல் தளபதியாக இருந்தவரே விஜி ஆவார்.
மன்னார், கிளிநொச்சி கட்டளை பணியகங்களின் பகுதி பொறுப்பாளராக கடமையாற்றிய விஜி, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி படுகாயம் அடையும் வரை களமுனைகளில் நின்று பெரும் போர்களில் பங்குபற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்காலின் இறுதி கணங்கள் பற்றியும், இறுதி யுத்தத்தில் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களது நிலை பற்றியும் தற்போது பேசப்பட்டு வருகின்ற துவாரகா விவகாரம் பற்றியும் தளபதி விஜியின் நிலைப்பாடு தொடர்பிலான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |