திருமணமாகாத 30 வயதை தாண்டிய பல வாலிபர்கள் பாதயாத்திரை - ஆச்சரிய சம்பவம்!
30 வயதை தாண்டிய திருமணமாகாத வாலிபர்கள் இணைந்து கர்நாடகா மாநிலத்தில் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள்.
கர்நாடகாவில் மாண்டியா மாவட்டத்தில் அதிகமான திருமணமாகாத 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில், மணப்பெண் கிடைப்பதற்காக நூதன முயற்சியை எடுத்துள்ள அவர்கள், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு 105 கி.மீ பாத யாத்திரை செல்ல தீர்மானித்து உள்ளனர்.
பிரம்மச்சாரிகள் பாதயாத்திரை

குறித்த பாத யாத்திரைக்கு "பிரம்மச்சாரிகள் பாதயாத்திரை" என்று பெயர் குறிப்பிட்டுள்ளனர்.
வருகின்ற 23-ந் திகதி இந்த பாத யாத்திரை தொடங்குவதுடன், இதில் சுமார் 200 திருமணமாகாத, 30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் திருமணமாகாத 30 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என அந்த அமைப்பு கூறியுள்ளதுடன், மணமகள் தேடி நடக்கும் குறித்த பயணத்தில் 3 நாட்களும் 3 வேளை உணவும், தங்கும் இட வசதியும் இலவசமாக வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.        
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        