அநுர அரசை அதிகாரத்திலிருந்து துரத்துவதே நோக்கம் : வெளிப்படையாக அறிவித்தது ரணில் தரப்பு
“ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் (npp)தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதால், அவர்களை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவதே எங்கள் நோக்கம்,” என்று ஐக்கிய தேசிய கட்சியின்(unp) பொதுச் செயலாளர் தலதா அதுகோரள(thalatha athukorala) தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிந்த நிலையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சிகளுடன் பேசத் தயார்
எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டு நிர்வாகங்களை அமைப்பதற்கு மற்ற எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைப்பதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் தீர்மானிக்க ஐக்கிய தேசியக் கட்சி (UNP) பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக உள்ளது.
“எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நிர்வாகங்களை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் மீண்டும் பேச்சை தொடங்கலாம்
“நாங்கள் எப்பொழுதும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருந்தோம், நானும் எங்கள் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தனவும் சிறிது காலத்திற்கு முன்பு அவர்களுடன் ஒரு உரையாடலை நடத்தினோம். இந்த செயல்முறையை இப்போது மீண்டும் தொடங்கலாம்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
