ரணிலின் வெற்றி - பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம் (படங்கள்)
பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி கொண்டாட்டம்
இலங்கை ஜனநாயக மக்கள் அரசாங்கத்தின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக ரணில் விக்கிரமசிங்க இன்று (20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, ஹட்டன் நகரில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஹட்டன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த நாடு
பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்த தாய்நாட்டை மீளக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைவர் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவே என ஊடகங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியல் கருத்துக்களை விட்டுவிட்டு நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


