நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை : நீரில் மூழ்கி இருவர் மாயம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இரு வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னேரிய குளத்திலிருந்து கந்தளே ஏரிக்கு நீர் செல்லும் கால்வாயில் நீராடச் சென்ற நபர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துரலிய, யஹலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான நபர் ஒருவரே இவ்வாறு காணமாமல் போயுள்ளார்.
தேடும் பணிகள்
இந்நிலையில் காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, வக்கமுல்ல, வீரகெடிய, ஊருபோகுஓயே அணையின் மீது நடந்து சென்ற 40 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்கமுல்ல, ஹகுருவெல பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஒளிபரப்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் குறித்து ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கை!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |