உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விரைவில் வரப்போகும் நல்ல செய்தி : அநுர வெளியிட்ட சூசகம்
அப்பாவி பொதுமக்களை கொன்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முக்கிய செய்திகளை எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில்(dampulla) இன்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவர்களுக்கு நடந்தது என்ன..! யார் பொறுப்பு
அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி கொலைகளை இலகுவாக்கும் யுகம் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தீர்க்கப்படாத கடந்தகால வழக்குகள் குறித்து அவர் குறிப்பிடுகையில், "தாஜுதீனின் கொலைக்கு யாரும் பொறுப்புக் கூறப்படவில்லை, லசந்தவின் மரணத்திற்கு இன்னும் பதில் இல்லை, எக்னலிகொடவுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை" என்றார்.
“அமைதியான குடிமக்களுக்கு நீதி வழங்கவும், சாதாரண மக்கள் மீண்டும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கவும் இந்த வழக்குகள் அனைத்தையும் நாங்கள் தொடர்கிறோம்.
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ‘நல்ல செய்தி
அடுத்த சில நாட்களில் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ‘நல்ல செய்தியை’ எதிர்பார்க்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |