அநுர ஆட்சியில் சிக்கப்போகும் பாரிய கொலைக் குற்றவாளிகள்
தாஜூதீன், லசந்த, எக்னெலிகொடவை கொன்றவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியாது அவர்களை நிச்சயமாகச் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் (Anuradhapura) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”இலங்கை அரசியல் களத்தில் ஒருபோதும் வன்முறையாளர்களுக்கு இடமளிக்கப்படமாட்டாது. சிலருக்கு வேதனையளிக்கும் தீர்மானங்களுக்கும் எடுக்கப்படும். இதற்குப் பலமிக்கதொரு நாடாளுமன்ற அவசியமாகிறது.
தேங்காய் விலை அதிகரிப்பு
அனுபவமிக்கவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூறுபவர்களும், புதிய முகங்களையே அனுப்ப வேண்டும். ஏனெனில், நாடு எதிர்வரும் 14 ஆம் திகதிக்குப் பிறகு புதிய திசையில் செல்ல காத்திருக்கிறது.
எமக்கு வாக்களிக்காதவர்களே இன்று தேங்காய் விலை அதிகரித்துள்ளதாகக் கூச்சலிடுகின்றனர். நாம் குறுகிய காலத்தில் நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்வோம் என அவர்களுக்குக் கூற விரும்புகிறேன்.
வசிம் தாஜூதீன் (Wasim Thajudeen), லசந்த விக்கிரமதுங்க (Lasantha Wickrematunge), பிரகீத் எக்னெலிகொடவை (Prageeth Eknaligoda) கொன்றவர்கள் தேடப்படுகின்றனர். அவர்களால் தொடர்ந்தும் சுதந்திரமாகச் சுற்றித்திரிய முடியாது. அவர்களை நிச்சயமாகச் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
கடனுதவி அடிப்படையில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்த இந்தியா (India), தற்போது நன்கொடையின் அடிப்படையில் பல திட்டங்களை முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ளது” என ஜனாதிபதி தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |