மீண்டும் வழமைக்கு திரும்பிய மலையக தொடருந்து சேவை
புதிய இணைப்பு
மண்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான தொடருந்து பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, குறித்த தொடருந்து மார்க்கத்தின் ஊடான போக்குவரத்து செயற்பாடுகள் வழமைபோல இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரவு அஞ்சல் தொடருந்து மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து ஆகியவை தற்போது மீண்டும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக மலையகத்திற்கான மொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்பு
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மலையக தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒஹிய மற்றும் இதல்கஸ்இன்ன தொடருந்து நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்பட்டதாலேயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து மண்ணை அகற்றுவதற்காக தொடருந்து திணைக்கள பணியாளர்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சேவைகளை மீண்டும் தொடங்குதல்
அதன்படி, விரைவில் தொடருந்து சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் தொடருந்து மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படவிருந்த தொடருந்து ஆகியவை தொடர்புடைய பாதைகள் வழமைக்கு திரும்பும் வரை தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |