ஒன்றிணையும் ரணில் - சஜித் கூட்டணி : அநுர அரசுக்கு ஏற்படப் போகும் சிக்கல்

SJB Dr Rajitha Senaratne Ranil Wickremesinghe Sajith Premadasa UNP
By Sathangani Jan 12, 2025 05:06 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe), ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாசவும் (Sajith Premadasa) கூட்டிணைந்து செயற்படுவதற்காக சாதகமான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு (Local Government Election) முன்னதாக சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கள் தமக்குள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் கூட்டிணைந்து செயற்படுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் இரு கட்சிகளின் தலைவர்களின் ஒத்துழைப்புக்கள் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பண்டாரநாயக்க குடும்பத்தால் மாமா என்றழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் : சாடும் டயஸ்போரா

பண்டாரநாயக்க குடும்பத்தால் மாமா என்றழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் : சாடும் டயஸ்போரா

தாய்க் கட்சியில் இணைய வேண்டும்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மீண்டும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன.

ஒன்றிணையும் ரணில் - சஜித் கூட்டணி : அநுர அரசுக்கு ஏற்படப் போகும் சிக்கல் | Ranil And Sajith Will Join Trouble To Anura Govt

விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்க் கட்சியில் இணைய வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. அதற்காக கடந்த காலங்களில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டும் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மீண்டும் தாய்க்கட்சிக்கு வருவதற்கு தயாராக உள்ளனர். எனினும் அவர்கள் தங்களின் பிரதிநிதித்துவம் சம்பந்தமாக சிந்திக்கின்றார்கள்.

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு : வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி

இறக்குமதியாகும் வாகனங்களுக்கான வரி விதிப்பு : வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி

தேசிய மக்கள் சக்தி தோல்வி

இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியாக இணைந்து செயற்படுவதென்றும் இதனுடன் ஏனைய கட்சிகளையும் இணைத்து பரந்துபட்டதொரு அணியாக முன்னகர்வது குறித்து எதிர்பார்ப்புக்கள் உள்ளன.

ஒன்றிணையும் ரணில் - சஜித் கூட்டணி : அநுர அரசுக்கு ஏற்படப் போகும் சிக்கல் | Ranil And Sajith Will Join Trouble To Anura Govt

விசேடமாக ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணைகின்றபோது தேர்தல் வெற்றிகள் உள்ளிட்டவை சாதகமாக அமையும் என்பதை நடைபெற்று முடிந்த கூட்டுறவுத்துறைக்கான தேர்தல் வெளிப்படுத்தியுள்ளது.

ஆட்சியில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் இருக்கும் தேசிய மக்கள் சக்தியே தோல்வி கண்டுள்ளது. இந்த நிலைமையில் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் மீண்டும் இருதரப்பும் இணைந்து கொள்ள வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர். அதன் ஒரு வெளிப்பாடாகவே கடுவல தொகுதியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் மீள் இணைவு காணப்படுகின்றது.

குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அரசியல் இலாபம் தேடும் அநுர - சாடும் எம்.பி

குண்டுத்தாக்குதல் விவகாரத்தில் அரசியல் இலாபம் தேடும் அநுர - சாடும் எம்.பி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எனவே கட்சியின் அங்கத்தவர்களின் நிலைப்பாடுகளை கட்சிகளின் தலைவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதனால் அவர்கள் கூட்டிணைவது குறித்து பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவொரு முக்கியமானதொரு மாற்றமாகும்.

ஒன்றிணையும் ரணில் - சஜித் கூட்டணி : அநுர அரசுக்கு ஏற்படப் போகும் சிக்கல் | Ranil And Sajith Will Join Trouble To Anura Govt

ஆகவே, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை வெகுவாக உள்ளது. அதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பதவிநிலைகளைத் தாண்டி இருதரப்பினரும் இணைந்து கொள்ளும் பட்சத்தில் தான் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடியும் என்ற புரிதல் இரு தரப்பினரும் நன்றாகவே உள்ளது“ என தெரிவித்தார்.

யாழில் பெருந்தொகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழில் பெருந்தொகை போதைப்பொருளுடன் ஒருவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016