வெடிக்குமா உலகப் போர்: ஈரானை பயங்கரமாக தாக்கும் அமெரிக்கா - அச்சத்தில் உலகம்
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரான் மீது சக்தி வாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்கள் மீது செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஈரானிய ஆதரவுப் படைகளை இலக்காகக் கொண்டு, முதல் முறையாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க - சவூதி கூட்டுத் தாக்குதல்களின் பின்னர் மோதல் மேலும் விரிவடைந்துள்ளது.
வலுவான பதிலடி
அமெரிக்க இராணுவ நிலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சூளுரைத்த சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான இராணுவக் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான வசதிகள், கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புத் தளங்கள் உள்ளிட்ட இலக்குகளை அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவில் நடந்த தாக்குதல்களில் இருவர் காயமடைந்ததாகவும், வடமேற்கில் உள்ள குசெஸ்தான் மாகாணத்திலும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவானதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், எகிப்தின் டாமியெட்டா துறைமுகத்தில் இரண்டு இயற்கை எரிவாயுக் கப்பல்களில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் மூலம் தீப்பிடித்ததாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.
பல நாட்கள் நிலவிய அமைதிக்குப் பிறகுஇ பல முனைகளில் ஏற்பட்ட மோதல்கள், ஒரு முழுமையான போர் மீண்டும் தொடங்குவதற்கான அபாயத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |