நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Mahinda Rajapaksa
Namal Rajapaksa
Crime
Court of Appeal of Sri Lanka
By Thulsi
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீதான பணச்சலவை வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (30.7.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை ஒக்டோபர் 29ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், வழக்கும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி