மண்மேடு சரிந்து விழுந்ததால் மலையகத்துக்கான தொடருந்து சேவை பாதிப்பு
ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை தொடருந்து பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையகத்திற்கான தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் தொடருந்து ஹப்புத்தளையில் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
இதேவேளை, தொடருந்து பாதை தடைப்படுவதால் உடரட்ட மெனிக்கே தொடருந்தும் பொடி மெனிகே தொடருந்தும் இன்று காலதாமதமாக இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடருந்து பாதையில் மண் அகற்றும் பணி
அதன்படி, காலை 05.45 மணிக்கு பதுளையில் இருந்து கோட்டை வரை இயக்கப்பட வேண்டிய உடரட்ட மெனிகே தொடருந்து இதுவரை புறப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், காலை 08.30 மணிக்கு கொழும்புக்கு புறப்படவிருந்த பொடி மெனிகே தொடருந்தும் சில மணித்தியாலங்கள் தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்மேடு சரிவினால் தடைப்பட்ட தொடருந்து பாதையில் மண் அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |