உரம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
sri lanka
uram
sashendra rajapaksa
By Vanan
நாட்டிற்கு தேவையான அனைத்து உரங்களையும் இலங்கையில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழிநுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.
துறைசார் நிபுணர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும், அதன்படி, எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான கரிம உரங்களை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கரிம உற்பத்திக்கு தேவையான பின்னணியையும் அரசாங்கம் தயார் செய்து தரும் என்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்