பிள்ளைகளுக்கு உணவு கொடுப்பதா? கல்வி செலவைப் பார்ப்பதா? இளம் கைம்பெண்ணின் குமுறல் - உறவுப்பாலம் - பாகம் 77 (காணொலி)
கணவனால் கைவிடப்பட்ட நிலையில் எந்த விதமான உதவிகளும் இன்றி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தையும் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டையும் கவனித்துக் கொள்ளவேண்டியுள்ளதாக கண்ணீரோடு கூறுகின்றார் இந்த இளம் தாய்.
இவரிற்கு மூன்று பிள்ளைகள் - காலையில் சாப்பாடு இருக்குமா என்ற ஏக்கத்துடன் தான் தூங்கச் செல்வதாகவும் - தொடர்ந்து கூலிவேலை கிடைப்பதில்லை என்றும் அவர் கூறுகின்றார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் கணவன் பிரிந்து சென்றதாகவும் - யுத்தத்தின் போது தாயும் தந்தையும் உயிரிழந்துவிட்டனர் என்றும் - ஒரு சகோதரன் முன்னாள் போராளி அவர் எங்கே இருக்கின்றார் என்று கூடத் தெரியவில்லை என தமது கஷ்டத்தினை விளக்குகின்றார்.
சாரணிதேவி: முல்லைத்தீவு - கைவேலி
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் - Whatsapp /Viber +94767776363/+94212030600
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் காணொலியில்,
உறவுப்பாலம் 76 பாகத்தின் காணொலி