யூரியாவை அனுப்ப இந்தியா எடுத்த நடவடிக்கை
Sri Lanka
Narendra Modi
India
By Vanan
யூரியா நன்கொடை
ஓமானிலிருந்து இலங்கைக்கு நேரடியாக யூரியாவை அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கு 65, 000 மெட்ரிக் தொன் யூரியாவை நன்கொடையாக வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதலை வழங்கியிருந்தார்.
இந்தியா நடவடிக்கை
இந்தத் தொகுதியே ஓமானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நேரடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இதற்கான அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி