விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் - நாளை முதல் குறைவடைகிறது யூரியாவின் விலை..!
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
50 கிலோகிராம் எடையுடைய யூரியா உரப்பொதியின் விலையை 9,000 ரூபாவாக குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (15) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
யூரியா உரப்பொதியின் தற்போதைய சந்தை விலை 10,000 ரூபாவிற்கும் அதிகமாகக் காணப்படுகின்றது.
22,500 மெட்ரிக் தொன் யூரியா
இதனிடையே, 22,500 மெட்ரிக் தொன் யூரியா உரம் கப்பல் மூலம் அண்மையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
குறித்த கப்பலில் இருந்து உரத்தை இறக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வௌி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்