அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் பட்டியலில் இணைய தயாராகும் அடுத்த நாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) வரிவிதிப்புகளைக் குறித்து கலங்கியிருந்த பல நாடுகள் பதிலடி, கொடுக்க தயாராகி வரும் நிலையில் பிரித்தானியாவில் (UK) அரசியல் கட்சி ஒன்று அந்நாட்டு மக்களிடம் முக்கிய விடயம் ஒன்றை வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்க, பிரித்தானிய தயாரிப்புகளை வாங்குமாறு பிரித்தானிய மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவை முன்மாதிரியாகக் கொண்டு இந்த முடிவை எடுக்குமாறு பிரித்தானியாவின் லிபரம் டெமாக்ரட்ஸ் கட்சி மக்களை வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய மக்கள்
கனடாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள கனடா பிரதமரான மார்க் கார்னி, சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், 'எங்கெல்லாம் கனேடிய பொருட்களை வாங்க வாய்ப்புள்ளதோ, அங்கெல்லாம் கனேடிய தயாரிப்புகளையே வாங்குங்கள்' என தன் நாட்டு மக்களைக் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல, பிரித்தானிய அரசும், "Made in Britain" என்ற லட்சினையுடன் உள்ள, பிரித்தானிய தயாரிப்புகளையே வாங்க பிரித்தானிய மக்களைத் தூண்டும் வகையில் ஊடகங்களில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 6 மணி நேரம் முன்
