நிராகரிக்கப்பட்ட தீர்மானம்: ரணிலை பின் தொடர்ந்த மொட்டு உறுப்பினர்கள்
பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) சந்தித்துள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (29) இரவு இடம்பெற்றுள்ளதுடன், அதில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை முன்வைப்பதற்காக இன்று பிற்பகல் கூடிய சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ரணிலுக்கு ஆதரவு
அதனை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினர், கொழும்பு மல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவின் அரசியல் காரியாலயத்தில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த சந்திப்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன் போது, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, அனுப பஸ்குவல், கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மகிந்தானந்த அளுத்கமகே, எஸ்.பி. திஸாநாயக்க, பிரேம்நாத் சி தொலவத்த உள்ளிட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |