கொழும்பு சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில், சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படும் விசேட இன்சுலின் மருந்துக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
எனவே தட்டுப்பாடனான இந்த இன்சுலின் மருந்தை நன்கொடையாக வழங்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வைத்தியசாலையில் சாதாரண இன்சுலின் போதுமானளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்த அவர், விசேட இன்சுலினுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்து வகையைப் பெற்றுக்கொள்வதற்காக சமூக வலைத்தளங்கள் ஊடாக நன்கொடையாளர்களால் நிதி சேகரிக்கப்படுவதாகவும் அவ்வாறு சேகரிக்கப்படும் நிதியிலிருந்து 11 இலட்சம் ரூபாய் பெறுமதியான இன்சுலின் நாளை (12) வைத்தியசாலைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
