ஈராக்கில் ஈரான்சார்பு குழுக்களின் நிலைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா
ஈராக்கில் ஈரான்சார்பு ஆயுதக்குழுக்களின் மூன்று நிலைகள் மீது அமெரிக்கா நேற்று (23)வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார்.
இதேவெளை ஈராக்கில் கட்டாப் ஹெஸ்புல்லா குழுவிற்கு எதிராகவும் ஏனைய ஈரான் சார்பு குழுக்களிற்கு எதிராகவும் தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.
ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள அமெரிக்க ஏனைய நாடுகளின் படையினருக்கு எதிரான தாக்குதலிற்கு பதிலடியாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்
அமெரிக்காவின் நலன்களை பாதுகாப்பதற்காக அதிபரும் நானும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் பிராந்தியத்தில் மோதல்களை விஸ்தரிக்க நாங்கள் விரும்பவில்லை, எங்கள் மக்களையும் எங்கள் நலன்களையும் பாதுகாப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயாராகவுள்ளோம், இந்தக் குழுக்களையும் அவர்களிற்கு ஆதரவு வழங்கும் ஈரானியர்களையும் தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |