மத்திய வங்கி ஆளுநருக்கு அமெரிக்க தூதுவர் அளித்த உறுதிமொழி
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) விற்கும்இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்(Julie Chung)கிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு நேற்று (10) அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டநேர கலந்துரையாடல்
இது தொடர்பில் தனது எக்ஸ் வலைத்தள பதிவில் குறிப்பை வெளியிட்ட அமெரிக்க தூதர், இருதரப்பு உறவுகள், கடன் மறுசீரமைப்பு மற்றும் நடந்து கொண்டிருக்கும் சீர்திருத்தங்கள் குறித்து இருவருக்கும் இடையே நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
Pleased to welcome the Central Bank Governor, Dr. Nandalal Weerashinghe, to the Embassy this week to discuss bilateral ties, debt restructuring, and ongoing reforms. I underscored the need for good governance and transparency as the United States continues supporting the… pic.twitter.com/wMXAhoPEw4
— Ambassador Julie Chung (@USAmbSL) May 10, 2024
அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்
இலங்கைக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலாலுக்கு தெரிவித்ததாக ஜூலி சங் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |