அமெரிக்க தூதுவர் யாழ் வருகை - பொதுநூலகம் பல்கலைக்கழகம் போன்றவற்றிற்கு விஜயம்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் பொது நூலகம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவரை யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராஜா ஈசன் வரவேற்றார். இதன்போது மாநகர சபை ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரும் கலந்து கொண்டார்.
இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் யூ.எஸ். எயிட் அனுசரணையுடன் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடத்தால் நடத்தப்படும் சமாதானமும், முரண்பாடுகளுக்கான தீர்வுகளும் என்ற முதுமாணிக் கற்கை நெறிக்கான அனுசரணையாளர் உடன்படிக்கையை கைச்சாத்திட்டர்.
அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரும், யூ.எஸ். எயிட் நிறுவன அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது















