தாக்குதல்களை நிறுத்தும் அமெரிக்கா - ஈரான்! அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் ஹோர்முஸ் விவகாரம்
ஹோர்முஸ் நீரிணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த பரஸ்பர பதிலடித் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பும் செவ்வாய்க்கிழமை(30) அன்று கத்தாரில் ஈடுபடவுள்ளன.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் சுவிட்சர்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.
தடையற்ற கப்பல் போக்குவரத்து
எனினும், திட்டமிட்டபடி அவை நடக்குமா என்பதில் தமக்கு நூறு வீத உறுதிப்பாடு இல்லை என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிக்கைகளின்படி, வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஹோர்முஸ் நீரிணை வழியிலான தடையற்ற கப்பல் போக்குவரத்து குறித்தே முதன்மையாக கவனம் செலுத்தவுள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்