செங்கடலில் அதிகரித்துள்ள பதற்றம் : யெமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தாக்குதல்
செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் யெமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலை அடுத்து யெமனின் பல பகுதிகளிலும் வெடிப்புகள் இடம்பெற்றதை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தேவை ஏற்பட்டால் மேலும் நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் வெளியான தகவல்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்
ஹவுதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் ஈரான் இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளது.
மறுபுறம் இஸ்ரேலை நோக்கிச் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசுவதற்கு உடன் பாதுகாப்புச் சபையை கூட்டும்படி ரஷ்யா கோரியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே செங்கடலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்துவதாக ஹவுதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க – சியோனிச – பிரிட்டன் ஆக்கிரமிப்பு
தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவரும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஒஸ்டின் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,
“ஆளில்லா விமானங்கள், பளிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள், ராடார் மற்றும் வான் கண்காணிப்பகம் ஆகிய ஹூவுதிக்களின் திறன்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.” என்றார்.
தலைநகர் சனாவுடன் சாதா மற்றும் தார், அதேபோன்று ஹுதைதா நிர்வாகப் பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஹவுதி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலை “அமெரிக்க – சியோனிச – பிரிட்டன் ஆக்கிரமிப்பு” என்று வர்ணித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |