உக்ரைனைத் தொடர்ந்து தாய்வானுக்கும் உதவிக்கரம் நீட்டிய அமரிக்கா!

United States of America China Taiwan
By Kathirpriya Jul 29, 2023 10:24 AM GMT
Report

கிழக்காசியாவிலுள்ள நாடுகளில் ஜனநாயக நாடாக விளங்குகின்ற தாய்வானை, தனது தேசத்தின் ஒரு பகுதியாக சீனா அறிவித்துள்ளது. ஆனால் தாய்வான் இந்த முடிவிற்கு தனது எதிர்ப்புக்களையே வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தேவையேற்படின் இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக கூட தாய்வானை கைப்பற்றுவோம் என்று சீனா கூறுகின்றது.

கடந்த ஆண்டு (2022), சீன இராணுவம் தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் 2 பெரிய இராணுவ பயிற்சிகளை நடத்தியதன் போதே தாய்வான் தீவின் முற்றுகையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிற்கு இடையேயும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இராணுவ உதவி 

உக்ரைனைத் தொடர்ந்து தாய்வானுக்கும் உதவிக்கரம் நீட்டிய அமரிக்கா! | Us Announces Military Aid For Taiwan Amid China

இந்த நிலையில் அமெரிக்கா சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான இராணுவ உதவியினை தாய்வானுக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகள் மற்றும் சிறிய ஆயுத வெடிமருந்துகள் என்பன இதற்குள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

"இதன் மூலமாக, எதிர்காலத்தில் தன் நாட்டிற்கெதிராக நிகழ்த்தப்படும் இராணுவ நடவடிக்கைகளைத் தாய்வான் தடுக்க முடியும்", என அமெரிக்க இராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் உத்தரவு

உக்ரைனைத் தொடர்ந்து தாய்வானுக்கும் உதவிக்கரம் நீட்டிய அமரிக்கா! | Us Announces Military Aid For Taiwan Amid China

ரஷ்யாவிற்கெதிரான, உக்ரைனின் போராட்டத்தின் போது அமெரிக்கா உக்ரைனிற்கு அவசரகால உதவியாக இராணுவ தளபாடங்களை இராணுவ அமைச்சகம் வழங்கியது போலவே இப்போது தாய்வானிற்கும் உதவுகின்றது.

அமெரிக்க அதிபரின் ட்ரோடௌன் ஒதோறிர்ரி (drawdown authority) என்ற உத்தரவின் வாயிலாகவே அமெரிக்கா இந்த உதவியினை வழங்குகிறது.

இந்த தளபாடங்கள் அனைத்தும் அமெரிக்காவின் சொந்த இருப்புகளிலிருந்து வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் தற்போதைய நிலையை நிலைநிறுத்துவதற்காக, தாய்வான் அமெரிக்காவுடன் பாதுகாப்பு விடயங்களில் நெருக்கமாக ஒத்துழைக்கும்" என்று அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக தாய்வான் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.    

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026