இலங்கையை நோக்கி படையெடுக்கும் அமெரிக்க உயர் புள்ளிகள்
அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் தளபதி ஜெனரல் கெவின் ஸ்னைடர், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று (21) இலங்கையை வந்தடைந்த நிலையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை உதவிப் செயலர் எஸ். போல் கபூர், ஜூன் 24 வரை நீடிக்கும் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று (22) இலங்கை வந்தடைந்தார்.
கொழும்பில் தங்கியிருக்கும் போது, கபூர் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள், தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் இலங்கையில் செயல்படும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
பேச்சில் கவனம் செலுத்தப்படவுள்ள விடயங்கள்
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பகிரப்பட்ட பிராந்திய முன்னுரிமைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது, மேலும் இது கொழும்புக்கும் வோஷிங்டனுக்கும் இடையிலான தொடர்ச்சியான இராஜதந்திர ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |