ஈரானில் வெடிக்காமல் இருந்த அமெரிக்காவின் பதுங்குகுழி தகர்ப்பு குண்டு
ஈரானுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலின்போது, ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்திருந்த அமெரிக்க பதுங்குக்குழி தகர்ப்பு குண்டு வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டு அகற்றப்பட்டதாக ஈரானின் யாஸ்த் மாகாணத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி அறிவித்தார்.
சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேலிய போரின் போது, மத்திய நகரமான யாஸ்தில் உள்ள ஒரு குடியிருப்பு வீட்டில் விழுந்து, தரைக்குக் கீழே சுமார் 13 மீட்டர் ஆழத்தில் புதைந்திருந்தது.
பாதுகாப்பாக அகற்றப்பட்ட குண்டு
இந்த குண்டை, இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் வெடிபொருள் அகற்றும் பிரிவு மற்றும் மாகாணக் காவல் படைகளின் முயற்சிகள் மூலம் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டு அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டதாக, யாஸ்த் மாகாணத்தின் அரசியல், பாதுகாப்பு மற்றும் சமூக விவகாரங்களுக்கான துணை ஆளுநர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

வெடிக்காத அந்தக் குண்டு, GBU-39 பதுங்குக்குழி தகர்ப்பு வகையைச் சேர்ந்தது என அடையாளம் காணப்பட்டதாக இஸ்மாயில் தெஹெஸ்தானி கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்