அமெரிக்கா மற்றும் கனடாவில் பயங்கரமான சூழ்நிலை - அதிர்ச்சியூட்டும் மரண எண்ணிக்கை
அமெரிக்கா மற்றும் கனடாவை தாக்கிவரும் மிக கடுமையானவடதுருவக் குளிரலையில் சிக்கி இதுவரை 50 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மரணங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பயங்கரமான சூழ்நிலை
நியூயோர்க் பகுதியில் 1977 ஆம் ஆண்டு வீசிய பனிப்புயலை விட தற்போதைய பனிப்புயல் மிகவும் மோசமக தாக்கிய நிலையில், அங்கு மீட்புப் பணிகளில் நூற்றுக்கணக்கான துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சில பகுதிகளில் 40 அங்குலத்திற்கும் அதிகமான பனிப்பொழிவு பதிவுசெய்யப்பட்டுள்ளதால் இந்தப் பயங்கரமான சூழ்நிலையை தவிர்க்க மக்கள் வீடுகளில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நூற்றாண்டின் பனிப்புயல் என விபரிக்கப்படும் இந்தக் குளிர் புயலில் சிக்கியவர்களின் உதவிக்காக அனுப்பப்பட்ட மீட்பு வாகனங்கள் கூட பனியில் சிக்கிக்கொண்டன.
இதுவரை பனிக்குள் கைவிடப்பட்ட நிலையில் 11 நோயாளர் காவு வண்டிகள் மீட்கப்பட்டுள்ளன. மேற்கு நியூயோர்க் பிராந்தியத்தில் மாத்திரம் இதுவரை குளிர் காரணமாக 28 பேர் இறந்துள்ளனர்.
பனிப்பொழிவு
இன்று சில பகுதிகளில் இதுவரை இடம்பெற்ற பனிப்பொழிவுக்கு மேலதிகமாக மேலும் ஒன்பது அங்குலத்துக்கு பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது நியூயோர்க் மாநிலத்தில் அவசரகால நிலையை
பிரகடனப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
ஒப்புதல் வழங்கியுள்ளார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
