பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு சென்ற அமெரிக்காவின் போர்நிறுத்த நிபந்தனைகள்
United States of America
Pakistan
Iran
By Sumithiran
அமெரிக்கா முன்வைத்த போர்நிறுத்தக் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை பாகிஸ்தான், ஈரானிடம் ஒப்படைத்துள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, ட்ரம்ப் நிர்வாகத்தால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அதிகாரபூர்வ ஆவணம் ஒன்று ஈரானிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அல் ஜசீரா கூறுகிறது.
இந்தக் கோரிக்கைகளுக்கு ஈரானின் பதில் தற்போது எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் பாகிஸ்தான்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தணிப்பதற்காக பாகிஸ்தான் ஒரு மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.

வரும் நாட்களில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே நேரடி சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்