அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!
2023-ம் ஆண்டில் அமெரிக்காவானது 59,100 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றச் சேவைப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையின் படி, 8.7 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கியுள்ள நிலையில் இதில் 59,100 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது, அமெரிக்க குடியுரிமை பெற்றவெளிநாட்டவர்களின் பங்கில் 6.7 சதவீதம் ஆகும்.
அமெரிக்க குடியுரிமை
கடந்த 2022-ம் ஆண்டு 9.69 லட்சம் பேருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை விட குறைந்த எண்ணிக்கையிலேயே கடந்த 2023-ல் வெளிநாட்டவருக்கு அமெரிக்க அரசு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
2022-ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற8.7 லட்சம் பேரில் 1.1 லட்சம் பேர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என தரவுகள் குறிப்பிடுகின்றது.
அதேபோல் 2023லும் அமெரிக்க குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்களில் மெக்ஸிகோ நாட்டவர்களே முதலிடத்தில் உள்ளனர். இது 12.7 சதவீதமாகும்.
அமெரிக்கா கிரீன் கார்ட்
இரண்டாவது இடத்தை இந்தியா உள்ளது. மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸ் உள்ளது. அங்குள்ள 44,800 பேர் குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
அதற்கு அடுத்த இடங்களில் டொமினிக்கன் ரிபப்ளிக், கியூபா நாட்டவர்கள் உள்ளனர்.
அமெரிக்காவில் கிரீன் கார்ட் பெற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் வசிப்பதற்கான குடியுரிமை கேட்டுவிண்ணப்பிக்க முடியும்.
எனினும், இந்த விஷயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்த நபர்கள் காத்திருக்கும் கால அளவு 3 ஆண்டுகளாக உள்ளது.
கிரீன் கார்ட் கேட்டு விண்ணப்பித்து நீண்ட காலமாக இந்திய மக்கள் அமெரிக்காவில் காத்திருக்கும் நிலையும் அங்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |