ஈரானுடனான பேச்சை தொடங்க இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா
அமெரிக்கா -- ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் அடுத்த வாரம் முடிவுக்கு வரும் நிலையில், புதிய அமைதி பேச்சுக்கு அமெரிக்கா இரு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை அனுமதிப்பது; இரண்டாவது, பேச்சு நடத்தும் ஈரான் குழுவுக்கு அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கு முழு அதிகாரம் வழங்குவது.
நிபந்தனைக்கு உடன்பட்டால் இரண்டாது சுற்று பேச்சு
இதற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இரண்டாவது சுற்று பேச்சு பாகிஸ்தானில் தொடரும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.

தற்போது, ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. இப்போதே நாங்கள் வெளியேறினால் கூட ஈரான் தங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, 20 ஆண்டுகள் ஆகும். அதனாலேயே அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றனர் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் செய்தியுடன் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஈரானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |