2025 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க விசா : விண்ணப்பதாரர்களை தெரிவு செய்யும் பணி ஆரம்பம்
அமெரிக்காவில் குடியேறும் வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான பல்வகை வீசா (DV) திட்டத்திற்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலையை மே 04, 2024 அன்று 12.00 pm, EDT முதல் சரிபார்க்க முடியும் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா
விண்ணப்பதாரர்கள் தங்களது உறுதிப்படுத்தல் எண்ணை http://dvprogram.state.gov/ESC/ இல் உள்ளிடுவதன் மூலம் தங்கள் நிலையை சரிபார்க்க முடியும் என்று அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
It’s almost time for Diversity Visa 2025 selections! Starting May 4, 2024, at 12 p.m. EDT, you will be able to check the status of your entry by entering your confirmation number at https://t.co/S4bFfo9or9. This is the ONLY way to check if you have been selected to participate.… pic.twitter.com/XgUZzTTztp
— U.S. Embassy Colombo (@USEmbSL) April 24, 2024
"நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்களா என்பதை சரிபார்க்க இதுவே ஒரே வழி" என்று தூதரகம் மேலும் கூறியது.
ஒவ்வொரு ஆண்டும், பன்முகத்தன்மை விசா திட்டம் 50,000 க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை, அமெரிக்காவிற்கு அதிக குடியேறியவர்களை அனுப்பாத நாடுகளில் இருந்து மட்டுமே நிரந்தர வதிவிடத்தைப் பெற அனுமதிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |