சடுதியான சரிவில் அமெரிக்க டொலர் - நிலையான உயர்வில் இலங்கை ரூபா!
இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, நேற்றைய ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் வலுவடைந்துள்ளது.
அதற்கமைய செலான் வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 305 ஆகவும், விற்பனை விலை ரூ. 335வாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலரின் பெறுமதி
மக்கள் வங்கியின் மாற்று விகிதங்கள் அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் ரூ. 300.29 மற்றும் விற்பனை விலை ரூ. 326.29.
இதேவேளை, சம்பத் வங்கியின் மாற்று விகிதங்கள் கொள்வனவு வீதம் ரூ. 308 மற்றும் விற்பனை விலை ரூ. 323 ஆகவும் பதிவாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஒரு நிலையான உயர்வைக் கண்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
