டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று (05.06.2026) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.27 ரூபாயாக காணப்படும் அதேநேரம் அதன் விற்பனை விலை 342 ரூபாயாக அமைந்துள்ளது.
இதேவேளை நாணய மாற்று விகிதத்தின் படி, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444.30 ஆகவும் விற்பனைப் பெறுமதி 460.46 ஆகவும் பதிவாகியுள்ளது.
நாணய மாற்று விகிதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 384.25 ரூபாயாக பதிவாகியுள்ளதுடன் அதன் விற்பனை பெறுமதி 398.52 ரூபாயாக பதிவாகியுள்ள நிலையில் கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 237.88 ஆகவும் விற்பனைப் பெறுமதி 247.14 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 245.98 ஆகவும் பதிவாகியுள்ளதுடன் சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 256.52 ஆகவும் விற்பனைப் பெறுமதி 267.69 ஆகவும் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |